சினிமா செய்திகள்

SK-வின் ‘அயலான்’ ஷூட்டிங் ஓவர்; இந்த தேதியில் ரிலீஸ்!

Published

on

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ பட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்துக்குப் பின்னர் ஆரம்பித்த அயலானின் கடைசி ஷெட்யூலும் முழுவதுமாக முடிந்துள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். யோகி பாபு மற்றும் கருணாகரன் ஆகியோருக்கு படத்தில் முக்கியமான ரோல் கொடுக்கப்பட்டு இருக்கிறதாம். அயலான் மூலம் முதல் முறையாக சிவகார்த்திகேயன் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

முன்னதாக ‘இன்று, நேற்று, நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் ‘அயலான்’ படத்தை இயக்கியுள்ளார். முதல் படமே டைம் டிராவல் – சைன்ஸ் ஃபிக்‌ஷன் பாணியில் எடுத்து அசத்தியிருந்தார் ரவிக்குமார். ஆகவே, இந்தப் படமும் அறிவியல் புனை கதை பாணியில் இன்னொரு எல்லையைத் தொடும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

அதேபோல படத்தில் குறிப்பிடத்தகும் இரண்டு தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளனர். ஒருவர் அயலானுக்கு ஒளிப்பதிவு செய்த நிரவ் ஷா. சாதாரண படங்களிலேயே ஹாலிவுட் அளவுக்கு காட்சிகளைக் கொடுப்பவர் நிரவ் ஷா. இந்தப் படத்தில் அவரது கலை நேர்த்தி மேலும் நுட்பமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக ‘கே.ஜி.எஃப்’ படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக தேசிய விருது பெற்ற அன்பு மற்றும் அறிவு ஆகியோரது கூட்டணியும் அயலானில் பட்டையைக் கிளப்பியிருக்கும் எனப்படுகிறது.

அயலான் படத்தில் பல கிராஃபிக் காட்சிகள் இருக்கும் என்பதால், போஸ்ட் புரொடெக்‌ஷன் வேலைகளுக்கு அதிக நாட்கள் எடுக்கும் என சொல்லப்படுகிறது. அனைத்தையும் முடித்து இந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்குப் படத்தைத் திரைக்குக் கொண்டு வர படக்குழு முயன்று வருகிறது.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version