சினிமா
சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் “கனா“ இப்படம் டிசம்பரில் வெளியீடு!
முதன்முதலாகச் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள படம் கனா. இப்படத்தில் நெருப்புடா பாடல் புகழ் அருண்ராஜா காமராஜா இயக்கியுள்ள படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் மற்றும் பலர் இப்படத்தின் முக்கியக் கதாப்பத்திராத்தில் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவிருப்பதாக அறிவித்துள்ளனர். ஆனால், டிசம்பரில் எந்தத் தேதியில் வெளியாகிறது என்பதைக் குறிப்பிடவில்லை.