சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் அடுத்த பட ஹீரோ சாய்பல்லவியா?

Published

on

சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் நாயகியாக நடிக்க நடிகை சாய்பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்ற நிலையில் அவர் நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படமான டான் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நேரடி தெலுங்கு படமொன்றில் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த படத்தை பிக்பாஸ் இயக்குனர்களில் ஒருவரான ராஜ் குமார் பெரியசாமி இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கமல்ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் இணையும் இந்த திரைப்படத்தில் சாய்பல்லவி நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குனர் இன்னும் ஓரிரு நாளில் தெரிவிப்பார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இதற்கு முன் சாய்பல்லவி சூர்யா நடித்த ’என்ஜிகே’ என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் என்பதும் அதன் பின்னர் தமிழில் நடிக்காத நிலையில் தற்போது இந்த படத்தின் மூலம் அவர் தமிழுக்கு ரீஎண்ட்ரி ஆகவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் இந்த படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version