சினிமா செய்திகள்

’நாய்சேகர்’ டைட்டிலை வெளியிட்ட சிவகார்த்திகேயன்: வடிவேலுவுக்கா? சதீஷூக்கா?

Published

on

’நாய்சேகர்’ என்ற டைட்டில் சதீஷ் நடிக்கும் படத்திற்கா? அல்லது வடிவேலு நடிக்கும் படத்திற்கா? என சர்ச்சைகள் நீண்டு கொண்டிருந்த நிலையில் சற்று முன்னர் நடிகர் சிவகார்த்திகேயன் ’நாய்சேகர்’ என்ற டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது

பத்து வருடங்களுக்கு பின்னர் நடிகர் வடிவேலு மீண்டும் திரையுலகில் ரீ எண்ட்ரி ஆகியுள்ள நிலையில் சுராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் அவர் நடிக்க உள்ளார். லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ’நாய்சேகர்’ என்ற டைட்டில் பொருத்தமாக இருக்கும் என கருதியதால் அந்த டைட்டில் வைக்க படக்குழுவினர் முடிவு செய்தனர்

ஆனால் இந்த டைட்டில் ஏற்கனவே சதீஷ் நடித்து வரும் திரைப்படத்திற்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த டைட்டிலை தர முடியாது என அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் கூறியதாகவும் செய்திகள் வெளியானது. இது குறித்து வடிவேலு தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தியும் ஏஜிஎஸ் நிறுவனம் டைட்டிலை கொடுக்கவில்லை என்று செய்திகள் வெளியானது.

இந்நிலையில் வடிவேலு நடிக்கும் திரைப்படத்திற்கு ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்ற டைட்டில் வைக்க இருப்பதாக கூறப்பட்டது. இதனை அடுத்து தற்போது சதீஷ் நடிக்கும் ’நாய்சேகர்’ என்ற திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் அதில் பதிவு செய்திருப்பதாவது:

வடிவேல் சாரின் ரசிகனாக இந்த முதல் பார்வை வெளியிடுவதில் மகிழ்ச்சி. நடிகர் சதீஷ் அவர்களே, உங்கள் பொறுப்பு அதிகமாகிவிட்டது, சிறப்பாக செய்யுங்கள், படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version