சினிமா செய்திகள்

’கேஜிஎஃப் 2’ வெற்றியால் சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்ட சிக்கல்: சமாளிக்க புது திட்டம்!

Published

on

சமீபத்தில் வெளியான கேஜிஎப் 2 திரைப்படத்தின் மாபெரும் வெற்றியால் சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படம் மே 13ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பிரமோஷன் பணியை ஒரு மாதத்திற்கு முன்பே படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர் .

ஆனால் தற்போது எந்த ஊடகத்தை பார்த்தாலும் எந்த சமூக ஊடகத்தை பார்த்தாலும் ’கேஜிஎஃப் 2’ படத்தின் மாபெரும் வெற்றி மற்றும் அதன் வசூல் தான் செய்தியாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மற்றா படத்தின் செய்திகளை யாரும் கண்டுகொள்வதே இல்லை .

இந்த நிலையில் ‘டான்’ படத்தின் புரமோஷனை தற்போது ஆரம்பித்தால் எடுபடாது என படக்குழுவினர் அமைதியாக உள்ளனர். ஆனால் அதே நேரத்தில் அடுத்த வாரம் முதல் அதிரடியாக வித்தியாசமான முறையில் ‘டான்’ படத்தை புரோமோஷன் செய்ய சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளார் .

‘டான்’ மற்றும் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தது போல் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு சிவகார்த்திகேயன் நேரடியாக சென்று ‘டான்’ படத்தை புரமோஷன் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது .

முதல் கட்டமாக சென்னை, மதுரை, கோவை ஆகிய பகுதிகளில் புரமோஷன் பணிகளை நேரடியாக சென்று நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இதனால் இந்த படத்திற்கு மிகப் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

 

Trending

Exit mobile version