சினிமா செய்திகள்

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்.. பிக்பாஸில் வெளியான அதிரடி அறிவிப்பு!

Published

on

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு, பிக்பாஸ் சீசன் 5 இறுதி விழாவில் அறிவிக்கப்பட்டது.

இன்று பிக்பாஸ் இறுதி விழாவில் சிவகார்த்திகேயன் கலந்துகொள்ள உள்ளார் என்பது ப்ரோமோ மூலம் தெரியவந்தது. ஆனால் பிக்பாஸ் சம்பந்தமாக இருக்கும் என பார்த்தால், கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த படத்தை ராஜ் கமல் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து சோனி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. சோனி பிக்சர்ஸ் நிறுவனம் ஸ்பைடர் மேன் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை தயாரித்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை கவுதம் கார்த்திக்கை வைத்து ரங்கூன் என்ற படத்தை இயக்கிய ராஜ் குமார் பெரிய சாமி இயக்க உள்ளார்.

சோனி பிக்சர்ஸ் இந்தியா நிறுவனம் முதலில் தமிழில் நேரடியாக தயாரிக்கும் தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version