சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயனுக்கு இந்த டைட்டில் கிடைக்குமா?
![sivakarthikeyan - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/06/sivakarthikeyan.jpg)
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படத்திற்கு எம்.ஜி.ஆர் பட டைட்டிலான ’எங்க வீட்டு பிள்ளை’ டைட்டில் வைக்க படக்குழு முயற்சி செய்து வருகிறது.
கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றிக்கு பிறகு, இயக்குநர் பாண்டிராஜ், சிவகார்த்திகேயன், பாரதிராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல், சமுத்திரகனி, சூரி, யோகிபாபு என நட்சத்திர பட்டாளத்துடன் குடும்ப பாங்கான படமொன்றை இயக்கி வருகிறார்.
இந்த படத்திற்கு எங்க வீட்டு பிள்ளை என்ற டைட்டில் பொருத்தமாக இருக்கும் என எண்ணிய பாண்டிராஜ், அந்த டைட்டிலை வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
ஆனால், எங்க வீட்டு பிள்ளை டைட்டில் உரிமை விஜயா புரொடக்ஷனிடம் உள்ளது. இதனால், அந்த தலைப்பிற்கு அனுமதி பெறும் முயற்சியில் சன் பிக்சர்ஸ் மற்றும் பாண்டிராஜ் முயன்று வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.