சினிமா செய்திகள்

நடராஜன் பயோ-பிக்கில் சிவகார்த்திகேயன்..!? – வெளிவந்த சர்ப்ரைஸ் தகவல்

Published

on

இந்திய அணியில் இடம் பிடித்திருக்கும் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனின் சாதனை வாழ்க்கை பயோ-பிக் திரைப்படமாக உருவாகவிருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் நடராஜன் ரோலில் சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்புள்ளதாம்.

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன், தனது யார்க்கர்களின் மூலம் ஐபிஎல் தொடரில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியில் இடம் பிடித்த நடராஜன், சர்வதேச அளவிலும் கலக்கினார். பல தடங்கல்களைத் தாண்டி சாதித்த நடராஜனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அவருடன் நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் வீடியோ கால் பேசினார் என்று நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல். மேலும் அப்போது நடராஜனின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க வேண்டும் என்கிற விருப்பத்தை சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார் என்றும், இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனால் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகலாம். திரையிலும் நடராஜனின் வாழ்க்கைச் சாதனையை நம்மால் பார்க்க முடியும்.

Trending

Exit mobile version