சினிமா செய்திகள்

நம்ம வீட்டு பிள்ளை வசூல் நிலவரம் என்ன?

Published

on

சிவகார்த்திகேயன் நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை வெளியாக வெற்றிகரமாகத் திரையில் ஓடிக்கொண்டு வருகிறது.

கடந்த 4 நாட்களில் சென்னையில் மட்டும் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் 2.35 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. தமிழ் நாடு மற்றும் உலகம் முழுவதும் சேர்த்து நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் 25 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது.

ரஜினி முருகன் திரைப்படத்திற்கு நீண்ட காலமாக வெற்றியை ருசிக்காமல் இருந்த வந்த சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் திருப்புமுனையாகவும் அமைந்துள்ளது.

நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தி டப்பிங் திரைப்படமான வார் மற்றும், சிரஞ்சீவியின் சுதந்திர போராட்டம் திரைப்படமான சையிரா உள்ளிட்டவை நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தின் வசூலைப் பாதிக்க வாய்ப்புகள் உள்ளன.

ஆனாலும் தமிழில் குடும்ப திரைப்படங்கள் என்ன போட்டியிருந்தாலும் வசூலை குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

seithichurul

Trending

Exit mobile version