சினிமா செய்திகள்

சீனாவில் வெளியாகும் சிவகார்த்திகேயன் படம் :ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published

on

சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் ஒன்று சீன மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடங்களில் நடித்த திரைப்படம் கனா. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் ஒரு தயாரிப்பாளராக இந்த படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு பெரும் லாபம் கிடைத்தது என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் இந்த படம் விளையாட்டு சம்பந்தப்பட்ட படம் என்பதால் சீனாவில் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நோக்கத்தில் சீன மொழியில் டப்பிங் செய்து வெளியிட முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து அதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது மார்ச் 18ஆம் தேதி இந்த படத்தை சீனாவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பை சிவகார்த்திகேயன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதுவரை பெரும்பாலான ஹிந்தி படங்களிலும் பாகுபலி என்ற தெலுங்கு படமும் மட்டுமே சீனாவில் ரிலீஸ் ஆன நிலையில் தற்போது தமிழ் படமும் சீனாவில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளதாக கருதப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version