சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் ‘டான்’ சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published

on

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் ‘டான்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படம் அடுத்தாண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கியுள்ளன.

சிவகார்த்திகேயன் மற்றும் லைகா புரொடக்ஷன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் சிங்கிள் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை அனிருத் கம்போஸ் செய்து பாடியுள்ளார் என்பதும் இந்த பாடலை ரோகேஷ் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலின் ஒரு சில வினாடிகளில் வீடியோ காட்சிகள் சிவகார்த்திகேயன் புரோடக்சன் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள நிலையில் அதில் அவர் அசத்தலாக டான்ஸ் ஆடி உள்ளதை பார்க்க முடிகிறது. இந்த பாடல் நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கும் இந்த திரைப்படத்தில் எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பாலசரவணன், ஷிவாங்கி உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் இணைந்த பாடல்கள் அனைத்துமே இதுவரை ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த பாடலும் சூப்பர் ஹிட்டாகும் என்று கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version