சினிமா

மற்றொரு ரூ.100 கோடி வசூல் படமான ‘டான்’? திரைவிமர்சனம்

Published

on

சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ படத்தை அடுத்து மற்றொரு ரூ 100 கோடி ரூபாய் வசூல் படமாக இருக்கும் என கருதப்படுகிறது .

கிராமத்திலிருக்கும் சமுத்திரக்கனி தனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று தவம் இருக்கிறார். ஆனால் அவருக்கு சிவகார்த்திகேயன் என்ற ஆண் குழந்தை பிறந்ததால் அவர் குழந்தை முதலே வெறுப்பை காட்டி வருகிறார். இதனால் சிவகார்த்திகேயன் குழந்தையிலிருந்து அடாவடியாக வளர்கிறார்.

பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்லும் சிவகார்த்திகேயன் அங்கு ஆசிரியர் எஸ்ஜே சூர்யா உடன் மோதல் போக்குடன் நடந்து கொண்ட நிலையில் எஸ்.ஜே சூர்யாவை அவர் கல்லூரியில் இருந்து விரட்ட போடும் திட்டம் அவருக்கு பாதகமாக அமைந்து விடுகிறது. அதன்பின் என்ன நடந்தது என்பதுதான் இந்த படத்தின் கதை.

சிவகார்த்திகேயன் பள்ளி மற்றும் கல்லூரி கேரக்டரில் முழுக்க முழுக்க ஜாலியாக வருகிறார். அவரது கிராமத்தில் நண்பராக சூரி, கல்லூரி நண்பர்களாக பாலசரவணன், சிவாங்கி, ஆர்ஜே விஜய் ஆகியோர் கலக்குகின்றனர்.

முதல் பாதி முழுக்க முழுக்க காமெடி அம்சமாகவும் கலகலப்பாகவும் கதை நகர்வதால் நேரம் போனதே தெரியவில்லை. அந்த அளவுக்கு படத்தை முழுக்க முழுக்க ஜாலியாக சிபிச்சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். இரண்டாவது பாதியில் சிவகார்த்திகேயன் – எஸ்ஜே சூர்யா வின் முதல் சமுத்திரகனியின் எமோஷனல் காட்சிகள் ஆகியவை இருந்தாலும் இரண்டாவது பாதியிலும் காமெடி கலக்கல் ஆக உள்ளது என்பதால் இந்த படம் நிச்சயம் டாக்டர் பட்டம் போலவே ஒரு வெற்றிப்படம் என்பது உறுதியாகின்றது .

இயக்குனர்சிபிச் சக்கரவர்த்தி தன்னுடைய பள்ளி கல்லூரி அனுபவங்களையே படமாக எடுத்துள்ளார் என தெரிகிறது. மிகச் சிறந்த திரைக்கதை மற்றும் கடைசியில் சொல்லும் மிகச் சிறந்த மெசேஜ் பார்வையாளர்கள் மத்தியில் கவர்கிறது. அப்பா அம்மா ஆசிரியர்கள் ஆகியோர் குழந்தைகளை கண்டிக்கின்றார்கள் என்றால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும், அதனால் அப்பா அம்மா ஆசிரியர் சொல்வதை மதித்து வாழ்ந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று அறிவுரையை கூறி படத்தை முடிக்கிறார்.

சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா லவ் புருஷன் மிகவும் சிறப்பாக உள்ளது. மொத்தத்தில் இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு மற்றுமொரு வெற்றி படம் என்றே கருதப்படுகிறது.

 

Trending

Exit mobile version