சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

Published

on

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகும் தேதி குறித்த அறிவிப்பை சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படமான ‘டான்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று காலை ’அடாது மழையிலும் விடாது ‘டான்’ படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டு இருப்பதாக சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் அறிவித்த நிலையில் சற்று முன்னர் ‘டான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளார்.

மேலும் இது குறித்த புதிய போஸ்டர் ஒன்றை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ள இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, காளி வெங்கட், குக் வித் கோமாளி பிரபல்ங்களான புகழ், ஷிவாங்கி, உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை லைக்கா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version