சினிமா செய்திகள்

டாக்டர்’ படத்தின் புதிய போஸ்டர்கள்: இணையத்தில் வைரல்!

Published

on

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ திரைப்படம் இம்மாதம் 26ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் குழுவினர் புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

இந்த போஸ்டரில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், அர்ச்சனா, யோகி பாபு, இளவரசு உள்பட ஒரு சிலர் உள்ளனர். அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் பல படங்களில் ஹீரோவாக நடித்த வினய் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படம் சிவகார்த்திகேயன் வெற்றி படங்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version