சினிமா செய்திகள்

சன் டிவியால் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி படங்களுக்கு வந்த சிக்கல்!

Published

on

கொரோனா ஊரடங்கு காரணமாகத் திரை அரங்குகள் மூடப்பட்டுள்ளன. எனவே ரிலீஸ்க்க தயாராகி உள்ள பல படங்கள் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், டிஸ்னிப் ஹாட் ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியிடப் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன.

சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று, ஜோதிகா நடிப்பில் பொன்மகள் வந்தால் உள்ளிட்ட படங்கள் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகின. விஜய் சேதுபதியின் க.பெ.ரணசிங்கம் ஜி5-ல் வெளியானது. ஜெயம் ரவியின் பூமி படம் ஹாட் ஸ்டாரில் வெளியானது.

மாஸ்டர், ஈஸ்வரன், கர்ணன் உள்ளிட்ட சில படங்கள் திரை அரங்குகளிலும் வெளியாகின. ஆனால் கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு காரணமாக மீண்டும் திரை அரங்குகள் மூடப்பட்டுள்ளன.

எனவே இனியும் காத்திருக்க முடியாது என்று முடிவு செய்த பல தயாரிப்பாளர்கள், தாங்கள் தயாரித்து ரிலீஸ் செய்ய உள்ள படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி உள்ள டாக்டர் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்களை ஹாட் ஸ்டாரில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சாட்டிலைட் உரிமையும் தங்களுக்கு வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

ஆனால் டாக்டர், துக்ளக் தர்பார் படங்களின் சாட்டிலைட் உரிமை சன் டிவியிடம் உள்ளது. இரு பட தயாரிப்பாளர்களும் சன் டிவி நிறுவனத்திடம் படத்தின் சாட்டிலைட் உரிமையைத் திருப்பி அளிக்கும் படி கேட்டுள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்த சன் டிவி குழுமம் இது என்ன வங்கியா? உங்களுக்குத் தேவைப்படும் போது வைத்துக்கொள்வதற்கும், தேவையில்லை என்றால் திருப்பி கொடுப்பதற்கும் என்று கூறிவிட்டனர்.

எனவே இரண்டு திரைப்படங்களுக்கும் ஓடிடியில் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. விரைவில் வேறு ஓடிடி தளங்களில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இந்த படங்கள் வெளியாக வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version