சினிமா செய்திகள்

முதல்முறையாக ரூ.100 கோடி வசூலை நெருங்கும் சிவகார்த்திகேயன் படம்!

Published

on

சிவகார்த்திகேயனின் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ரூபாய் 100 கோடி வசூலை ’டாக்டர்’ திரைப்படம் நெருங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 9ஆம் தேதி வெளியாகிய சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பதும் ஆயுதபூஜைக்கு வெளியான அரண்மனை 3 போன்ற படங்களின் வசூலைவிட தாண்டி ’டாக்டர்’ படத்தின் வசூல் சூப்பராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் உலகம் முழுவதும் சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ திரைப்படம் தற்போது ரூபாய் 90 கோடி வசூல் செய்திருப்பதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படம் 100 கோடியை நெருங்கி விடும் என்றும் கூறப்படுகிறது

மேலும் நாளை மறுநாள் முதல் ’டாக்டர்’ திரைப்படம் கேரளாவில் வெளியாக உள்ளது. இதனை அடுத்து அங்கும் வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் படங்களில் முதல் முறையாக 100 கோடி ரூபாய் வசூல் செய்யும் படம் ’டாக்டர்’ என்பது குறிப்பிடத்தக்கது

இதுவரை ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் ஆகியோரின் படங்கள் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் அந்த பட்டியலில் தற்போது சிவகார்த்திகேயன் ’டாக்டர்’ படமும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version