சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயனின் ‘டான்’: அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் ‘டான்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன், அனிருத், சிபி சக்கரவர்த்தி ஆகியோர் தங்களது டுவிட்டர் பக்கங்களில் வெளியிட்டுள்ள இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முழுக்க முழுக்க கல்லூரி மாணவர்கள் மத்தியில் நடைபெறும் கதையம்சம் கொண்ட இந்த படம் முழுக்க முழுக்க ஜாலியாக இருக்கும் என்றும் படத்தின் இரண்டரை மணி நேரமும் விழுந்து விழுந்து சிரிக்கும் வகையில் காட்சிகள் இந்த படத்தில் உள்ளதாகும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர், இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதனை உறுதி செய்வதாக தெரிகிறது.
‘டான்’ பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் சிவகார்த்திகேயன், ஷிவாங்கி, பால சரவணன் உள்பட பலர் மிகவும் ஜாலியாக இருப்பதை பார்க்கும் போது இது ஒரு ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லைக்கா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் பாடல்களை கம்போஸ் செய்து முடித்து விட்டார் என்பதும் விரைவில் இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக ரிலீசாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் மற்றும் லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பாலசரவணன் காளி வெங்கட், ஷிவாங்கி உள்பட பலர் நடித்துள்ளனர்.
Here is the first look of #DON ???? #DONFirstLook @Dir_Cibi @anirudhofficial @priyankaamohan @iam_SJSuryah @thondankani @sooriofficial @KalaiArasu_ @SKProdOffl @LycaProductions @bhaskaran_dop @Inagseditor @Bala_actor @RJVijayOfficial @sivaangi_k pic.twitter.com/Y0a8wGA4AK
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) November 10, 2021