சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் பிறந்தநாளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘அயலான்’ ஃபர்ஸ்ட் சிங்கிள்!

Published

on

சிவகார்த்திகேயன் பிறந்தநாள் தினமான இன்று ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அயலான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் வருகிற மார்ச் மாதம் வெளியாக உள்ளது. அடுத்ததாக அயலான் படம் வெளியீட்டுக்குத் தயாராகவே உள்ளது. ரவிக்குமார் இயக்கி உள்ள அயலான் திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். அயலான் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, இஷா கோபிகர், கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

அறிவியல் சார்ந்த படமான அயலான் ஏப்ரல் அல்லது மே மாதத்திலேயே திரை அரங்கில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இன்று பிப்ரவரி 17-ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயனின் 36-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அயலான் படக்குழுவினர் சார்பில் ஏ.ஆர்.ரஹ்மான் ட்ரீட் ஆக அயலான் படத்தின் முதல் சிங்கிள் பாடல் ‘வேற லெவல் சகோ’ வெளியிடப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version