சினிமா செய்திகள்

தலையை பற்றி சொல்லி தல ரசிகர்களையும் ஈர்த்த சிவகார்த்திகேயன்!

Published

on

ராஜேஷ்.எம் இயக்கத்தில் நாளை மறுநாள் மே 17ம் தேதி வெளியாகவுள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தின் புக்கிங் பல தியேட்டர்களில் தொடங்கி விட்டது.

மேலும், படத்தை புரமோட் செய்ய புதிய புரமோக்களையும் படக்குழு ரிலீஸ் செய்து வருகிறது. அதில் தற்போது வெளியிடப்பட்டுள்ள புரமோவில் சிவகார்த்திகேயன் மற்றும் அவருக்கு அம்மாவாக நடித்திருக்கும் ராதிகா அவர்களும் பைக்கில் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர்.

பின்னாடி உட்கார்ந்து செல்வோரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை தல தான்மா நமக்கு முக்கியம் என்ற வசனத்தில் மூலம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்து, தல ரசிகர்களையும் ஹெல்மட் அணியும் அவசியத்தையும் வலியுறுத்தி உள்ளார் சிவகார்த்திகேயன்.

வேலைக்காரன் படத்திற்கு பிறகு இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். நடிகரும் சிவகார்த்திகேயனின் நண்பருமான சதிஷ் காமெடி ரோல் செய்துள்ளார். ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்த இப்படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது.

seithichurul

Trending

Exit mobile version