சினிமா

மண்டேலா பட இயக்குனர் படத்தில் சிவகார்த்திகேயன் – புது பட அப்டேட்!..

Published

on

மடோன் அஸ்வின் இயக்கிய திரைப்படம் மண்டேலா. இப்படத்தில் யோகிபாபு நடித்திருந்தார். ஒரு கிராமத்தில் நடக்கவுள்ள பஞ்சாயத்து தேர்தலில் ஒரு ஓட்டுக்காக என்னென்ன செய்கிறார்கள் என்பதை தோலுரித்து காட்டியிருந்தார். இப்படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்ததோடு பலரும் இப்படத்தை பாராட்டியிருந்தனர். எனவே, சினிமாத்துறையின் கவனத்தையும் மடோன் அஸ்வின் பெற்றார்.

இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனை இயக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளது. இவர் கூறிய கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்துப்போக வேல்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.

சிவகார்த்திகேயன் தற்போது டான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது. அதன்பின் சிங்கப்பாதை என்கிற படத்தில் அவர் நடிக்கவுள்ளார். மேலும், கவுதம் மேனன் இயக்கத்திலும் அவர் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை முடித்துவிட்டு அவர் மடோன் அஸ்வின் இயக்கும் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version