தமிழ்நாடு

பாஜகவில் இணைந்த சிவாஜி கணேசன் மகனின் முக்கிய அறிக்கை!

Published

on

சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் தமிழகம் முழுவதும் பாஜக வேட்பாளர்களுக்காக தீவிரமாக பிரசாரம் செய்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன் அவருக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து நடிகர்திலகம் ஆசியுடன் இறை அருளுடன் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு மேற்கொண்ட தேர்தல் பரப்புரை பயணம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. பயணத்தின் பரப்புரையின்போது உடனிருந்து உதவிய நல் இதயங்கள், நண்பர்கள், அன்பர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவத் துவங்கியுள்ளது. மக்கள் அனைவரும் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தால், கூட்டமாக கூடாது இருத்தல் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கடைபிடிக்க வேண்டுகிறேன்.

இந்த தருணத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஜூலை 21-ஆம் நாள் நடிகர் திலகத்தின் நினைவு நாளை ஒட்டி இவ்வாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 108 பெண்களுக்கு தாலிக்கு அரை சவரன் தங்கம் வழங்கும் திட்டம் அன்னை இல்லம் சார்பில் துவங்கப்பட உள்ளது. இதற்கான விதிமுறைகள் நெறிமுறைகள் யாவும் விரைவில் அறிவிக்கப்படும். தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்’ என்று ராம்குமார் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Trending

Exit mobile version