தமிழ்நாடு

நடிகர் திலகம் பத்மஸ்ரீ சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் பாஜகவில் இணைந்தார்!

Published

on

நடிகர் திலகம் பத்மஸ்ரீ சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் மற்றும் அவரது மகன் துஷ்யந்த் உட்பட குடும்பத்தினர், திமுக Ex.MLA சௌந்தர பாண்டியன் உள்ளிட்ட பலர் இன்று பாஜக மாநில தலைவர் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் சினிமா நட்சத்திரங்கள் பலர் அரசியல் கட்சியில் இணைந்து கொண்டு வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

குறிப்பாக பாஜகவில் அதிக அளவிலான நடிகர் நடிகைகள் இணைந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் பாஜகவில் இணைந்துள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார். இவர் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக இருந்து வந்தவர். சிவாஜி கணேசன் ஒரு பழுத்த காங்கிரஸ்காரர் என்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமின்றி அவர் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியையும் நடத்தி வந்தார்., இந்த நிலையில் சிவாஜியின் மகன் ராம்குமார் காங்கிரசுக்கு எதிராக இருக்கும் பாஜக கட்சியில் இணைந்துள்ளது பெரும் சிவாஜி ரசிகர்களிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Trending

Exit mobile version