சினிமா செய்திகள்

சிவாஜி கணேசன் குடும்பத்தில் இருந்து மீண்டும் ஒரு நடிகன்..!- அறிமுகம் ஆகும் பேரன்

Published

on

நடிகர் சிவாஜி கணேசன் குடும்பத்தில் இருந்து மீண்டும் ஒரு நபர் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆக உள்ளார்.

நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் சினிமா தயாரிப்பிலும் இளைய மகன் பிரபு நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்தனர். சிவாஜியின் பேரனும் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு தற்போது தமிழ் சினிமாவில் நாயகன் ஆக வலம் வருகிறார். ராம் குமாரின் மூத்த மகன் துஷ்யந்த் சக்சஸ் என்னும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இரண்டாவது மகன் சிவகுமார் தேவ் என்ற சிவாஜி தேவ் கடைக்குட்டி என்ற படம் மூலம் அறிமுகம் ஆனார்.

ஒன்றிரண்டு படங்களுக்குப் பின்னர் தயாரிப்பாளர் ஆகிவிட்டார். தற்போது ராம்குமாரின் இளைய மகன் தர்ஷன் நாயகன் ஆக அறிமுகம் ஆக உள்ளாராம். நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் கடந்த 3 ஆண்டுகளாக மேடை நாடகம், நடனப் பயிற்சி, சண்டைப் பயிற்சி என மிகவும் பிஸியாக உழைத்து வருகிறாராம் தர்ஷன்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version