தமிழ்நாடு

தனி செயலி மூலம் ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பிய சிவகெங்கை இளைஞர் கைது!

Published

on

ஐபிஎல் போட்டிகளை தனி செயலி ஒன்றை உருவாக்கி அதன் மூலம் இலவசமாக ஒளிபரப்பி பெரும் வருமானமும் பார்த்த சிவகங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி இந்தியாவில் பாதியும், துபாயில் பாதியும் நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் துபாயில் நடந்த போட்டிகளை தனி செயலி ஒன்றை உருவாக்கி அதன் மூலம் பலருக்கு இலவசமாக கண்டுகளிக்கும் வகையில் சிவகங்கை பகுதியை சேர்ந்த ராமநாதன் என்ற சாப்ட்வேர் எஞ்சினியர் செய்துள்ளார். இதற்காக அவர் விளம்பரமும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்டார் டிவி நிர்வாகம் ஐதராபாத் காவல்துறையில் புகார் அளித்தது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் ராமநாதனை அவர்கள் கண்டுபிடித்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர் .

கோடிக்கணக்கில் உரிமையை வாங்கி ஒளிபரப்பிய ஐபிஎல் போட்டிகளை திருட்டுத்தனமாக செயலி மூலம் ஒளிபரப்பு செய்த ராமநாதன் என்பவருக்கு கடும் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version