தமிழ்நாடு

சிவகங்கை நகர்மன்ற தலைவர் கொலை வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை!

Published

on

சிவகங்கையில் நகர்மன்ற தலைவர் ஒருவர் ரிமோட் கண்ட்ரோல் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்ட நிலையில் அந்த கொலையில் சம்பந்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு சிவகங்கை நகர் மன்ற தலைவர் முருகன் என்பவர் தனது நகர்மன்ற அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த காரில் மர்ம நபர்கள் சிலர் வெடிகுண்டை பொருத்தியதாக தெரிகிறது. இந்த வெடிகுண்டு ரிமோட் மூலம் வெடிக்க செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து சம்பவ இடத்திலேயே நகர்மன்றத் தலைவர் முருகன் பலியானதாகவும் செய்திகள் வெளியானது.

இது தொடர்பாக சிவகங்கையைச் சேர்ந்த மணிமுத்து, குமரன் (எ) மந்தக்காளை, பாலச்சந்தர் (எ) பாலா, சரவணன், மாமுண்டி (எ) செந்தில், கே.கண்ணன், பாண்டி, பி.கண்ணன், முருகபாண்டி, கம்பம் மனோகரன், சென்னை வீரமணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பதும் இது குறித்த வழக்கு கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியாகியுள்ள நிலையில் இந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version