சினிமா செய்திகள்

மெகா கூட்டணியுடன் நாளை துவங்குகிறது சிவகார்த்திகேயனின் 16வது படம்!

Published

on

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படம் அடுத்த வாரம் மே 17ம் தேதி ரிலீசாகிறது. மேலும், ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படமும் மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்திலும் கமீட் ஆகியுள்ளார் சிவகார்த்திகேயன்.

 

இந்த படங்களை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள 16வது படம் நாளை மே 8ம் தேதி பூஜையுடன் ஆரம்பமாகிறது.

 

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல் என இரண்டு ஜோடிகள். யோகிபாபு மற்றும் சூரி காமெடி காம்போவாக மான் கராத்தே படத்திற்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் இணைகின்றனர்.

சிவகார்த்திகேயனின் மனங்கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா படங்களை தொடர்ந்து டி.இமான் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார்.

மெகா கூட்டணியில் உருவாகவுள்ள இந்த படத்தின் பூஜை நாளை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version