சினிமா
அமிதாப்பச்சன் பிறந்தநாளை கொண்டாடும் சைரா படக்குழு!
பாலிவுட்டின் பிதாமகர் என அழைக்கப்படும் அமிதாப்பச்சனின் 76வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அமிதாப்பச்சன் மற்றும் ஆமீர்கானின் நடிப்பில் உருவாகியுள்ள தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாகிறது. டோலிவுட் சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி, நயன்தாரா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில், நரசிம்ம ரெட்டியின் குருவான கோசாயி வென்கனாவாக அமிதாப்பச்சன் நடித்துள்ளார். அவரது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, அமிதாப்பச்சன் பிறந்த நாளை சைரா படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.
ஆனால், இன்றைய பிறந்த நாளை தனது ரசிகர்களுடனும், தனது குடும்பத்தினருடனும் அமிதாப் பச்சன் கொண்டாடவில்லை.
இதற்கு காரணம், தனது மகள் ஸ்வேதா நந்தாவின் மாமனாரும் தனது நெருங்கிய நண்பருமான ராஜன் நந்தாவின் மறைவு தான் காரணம் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்த தகவலால் அறிய முடிகிறது.
மேலும், சமீபத்தில், ராஜ் கபூரின் மனைவியும் இவரது உடன் பிறவா சகோதரியுமான கிருஷ்ண ராஜ் கபூர் மறைவும் அமிதாப்பை எந்தவொரு கொண்டாட்டத்தையும் கொண்டாட விடாமல் தடுத்துள்ளதாக தெரிகிறது.
தமிழ் ரசிகர்களின் நெஞ்சை கொள்ளை கொள்ள முதன்முறையாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நேரடி தமிழ் படமான உயர்ந்த மனிதன் திரைப்படத்தில் அமிதாப்பச்சன் நடிக்கவுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.