சினிமா செய்திகள்

சர்ஜுன் நீங்க ஷார்ட் ஃபிலிம் எடுக்கவே போயிடலாம்.. ஐரா விமர்சனம்!

Published

on

நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அதுவும், ஊரே ஒதுக்கும் கருப்பு அழகியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த ஒரு காரணத்திற்கு வேண்டுமானாலும், லேடி சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் படத்திற்கு சென்று பார்க்கலாம். மற்றபடி அதே பழைய பேய் பட டெம்ப்ளேட் தான்.

கருப்பாக இருக்கும் ஒரே காரணத்திற்காக கிராம மக்கள் ஒதுக்கப்படும் பவானியாக நயன்தாரா நடித்துள்ளார். கிராமம் என்றாலே மண் சார்ந்த நிலம் தான். தமிழக பெண்களின் நிறமும் கருப்பு தான். இப்படி இருக்க கருப்பு பெண்ணான நயன்தாராவை புறந்தள்ளுவதாக, கதையை வடிவமைத்த இடத்திலேயே இயக்குநர் சொதப்பிவிட்டார்.

மேலும், அந்த காட்சியைத் தவிற போல்டான பத்திரிகை நிருபராக வரும் கலர் நயன்தாரா யமுனா என்ற கதாபாத்திரத்தில் வருகிறார். ஆனால், படத்திற்கு அந்த கதாபாத்திரம் பலம் சேர்க்கவே இல்லை.

நயன்தாரா நடிப்பில் மாயா படம் மட்டுமே நல்ல திரைக்கதையுடன் வந்த பேய் படம் என்று மீண்டும் சொல்ல வைத்துவிட்டது. டோரா படம் சொதப்பியது போலவே ஐரா படமும் படு சொதப்பல்.

தேவையில்லாதவர்களை யமுனா ஆவி ஏன் கொல்கிறது. நயன்தாரா ஆவிக்கு பாவப்பட்டு, அதற்கு ஏன் துணை நிற்கிறார் என்ற பல காட்சிகள் பார்த்து பார்த்து புளித்துப் போன பேய் படங்களின் வரிசையில், ஐராவையும் கொண்டு சேர்த்துள்ளது.

லக்‌ஷ்மி, மா என்ற சர்ச்சை குறும்படங்களை எடுத்து தமிழ் சினிமாவுக்கு புதுக்கதைகளை இயக்குநர் சர்ஜுன் கொண்டு வருவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் மற்றும் ஐரா படங்களின் மூலம் புது தலைப்பு மட்டுமே ரசிகர்களுக்கு மிஞ்சியது.

யோகி பாபுவும், இந்த படத்தில் காமெடி என்று சிரிக்கும் அளவிற்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை. கலையரசன், நயன்தாராவுடன் நடித்து விட்ட பாக்கியத்தை மட்டுமே பெறுகிறார்.

மொத்தத்தில், ஐரா படம் திகில் ஊட்டாமல், சளிப்பை மட்டுமே தருகிறது.

சினி ரேட்டிங்: 1.75/5.

seithichurul

Trending

Exit mobile version