உலகம்

பெண்கள் பாதுகாப்பு கருதி ஆண்களைத் தனியாக பொது இடங்களில் அனுமதிக்கக் கூடாது.. முன்னாள் அதிபர் மகள் அதிரடி கருத்து!

Published

on

பெண்கள் பாதுகாப்பு கருதி ஆண்களைத் தனியாக பொது இடங்களில் அனுமதிக்கக் கூடாது என முன்னாள் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி மகள் பக்தவர் பூட்டோ ஜர்தாரி கூறியுள்ளார்.

பெண்கள் மீதான வன்முறை பற்றும் பாலியல் குற்றங்கள் பாகிஸ்தானில் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆண்களைத் தனியாக பொது இடங்களில் அனுமதிக்கக் கூடாது என்பதை தவிர வேறு நல்ல வழி ஏதுமில்லை.

ஆண்கள் தங்களது குடும்ப பெண்கள் உடன் வரும் போது பிற பெண்ணை தாக்க அல்லது பாலியல் தொல்லை கொடுக்க ஒன்றுக்கு இரண்டு முறை யோசிப்பார்கள்.

ஆண்கள் தனியாக பொது இடங்களில் வருவதைத் தடை செய்யப்பட வேண்டும். பெண்களைப் பாதுகாக்க நமக்கு அதிகமான பெண்கள் தேவை என பக்தவர் பூட்டோ ஜர்தாரி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற சுதந்திர கொண்டாட்ட நிகழ்வில் இந்திய தேசியக் கொடியை பண்படுத்திய ஒரு பெண் யூடியூபரை 200-க்கும் மேற்பட்ட ஆண்கள் பாலியல் ரீதியாகவும், அடித்தும் துன்புறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version