சினிமா செய்திகள்

பிரபல பாடகி கர்ப்பம்: டி.இமான் வாழ்த்து!

Published

on

தமிழ் உள்பட பல மொழிகளில் பாடல்கள் பாடும் பாடகி ஒருவர் கர்ப்பமாகி இருப்பதை அடுத்து இசையமைப்பாளர் இமான் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவர் பாடகி ஸ்ரேயா கோஷல். இவருக்கும் ஆதித்யா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் ஆன நிலையில் தற்போது தான் தாய்மை அடைந்து இருப்பதாகவும் பேபி ஸ்ரேயா ஆதித்யா வளர்ந்து கொண்டிருக்கிறார் என்றும் இந்த செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சி என்றும் உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் தேவை என்றும் தனது இன்ஸ்டாகிராமில் ஸ்ரேயா கோஷல் பதிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து ஸ்ரேயாவுக்கு இசையமைப்பாளர்கள், பாடகர்கள், பாடகிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளர் டி இமான் தனது வாழ்த்துச் செய்தியில் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஸ்ரேயா, உங்கள் அன்பானவரை எனக்காக பாடுவதற்கு தயார் செய்யுங்கள், அதுவரை ஆண்டவன் எனக்கு தொடர்ந்து இசையமைக்கும் ஆசீர்வாதத்தை தரட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி. நீங்கள் சொல்வது உண்மை ஆகட்டும் என்று ஸ்ரேயா பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version