சினிமா

ரமணியம்மாள் காலமானார்: கடைசி வரைக்கும் கஷ்டம்; சந்தோஷமா இருக்குற நேரம் பார்த்தா இப்படி ஆகணும்?

Published

on

ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப நிகழ்ச்சியில் பாடகியாக பங்கேற்று ரன்னர் அப் ஆன ரமணியம்மாள் பாட்டி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலாமானார்.

66 வயதில் பாடகி ரமணியம்மாள் உயிரிழந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. கிட்டத்தட்ட 43 ஆண்டுகள் வீடுகளில் பத்து பாத்திரம் தேய்த்தே அவரது வாழ்க்கை வீணானது.

காதல் படத்தில் இடம்பெற்ற தண்டட்டி கருப்பாயி பாடல் மூலம் அவரது குரல் சினிமாவில் இடம்பெற்றாலும், அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் அவருக்கு வரவே இல்லை. எம்ஜிஆர் பாடல்கள் என்றால் கொள்ளை பிரியமாக வேலை செய்யும் போது அலுப்பு தெரியாமல் இருக்க பாடி வந்த இவரது குரலை கேட்டு அசந்து போன ஒரு வீட்டுக்காரர் ஜீ தமிழ் நிகழ்ச்சியில் நீங்களும் பங்கேற்று பாடுங்கள் என அவரை அந்த நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

zee tamil

ஆரம்பத்தில் சின்ன பசங்களோடு நாம எப்படி போய் அசிங்கமா நின்னு பாடுறது, நம்மை எல்லாம் சேர்க்கவே மாட்டாங்க என நினைத்த ரமணியம்மாள் சரிகமப நிகழ்ச்சியில் கடைசி வரை டஃப் போட்டி கொடுத்து இரண்டாம் இடத்தை பிடித்தார். மக்கள் பலரும் இவருக்குத் தான் டைட்டில் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், கடைசியில் ரன்னர் அப் தான் கிடைத்தது.

அதற்கு பரிசாக 5 சென்ட் நிலத்தை திண்டிவனம் தாண்டி பல மாதங்கள் கழித்து அந்த பாட்டி பெரும் போராட்டத்தை சந்தித்தன் பின்னர் கொடுத்ததாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

43 வருடங்கள் கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்த ரமணியம்மாள் ஜுங்கா, காப்பான், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, சண்டக்கோழி 2 உள்ளிட்ட படங்களில் பாடி உள்ளார்.

சந்தோஷமாக இருக்க வேண்டிய காலத்தில் திடீரென இப்படி உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டாரே என பலரும் ரமணியம்மாள் மரணத்தை அறிந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version