சினிமா செய்திகள்

பாடகி சித்ராவுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு செய்த கெளரவம்!

Published

on

கடந்த சில மாதங்களாக ஐக்கிய அரபு அமீரகம் நாடு இந்திய திரை நட்சத்திரங்களுக்கு கோல்டன் விசா வழங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா என்பது அந்நாட்டின் முதலீடு செய்யும் தொழிலதிபர்கள் மற்றும் திரையுலக கிழக்கு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் இந்த கோல்டன் விசாவை வைத்திருப்பவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமகன்கள் போலவே அந்நாட்டில் கௌரவப்படுத்த படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே நடிகை ஊர்வசி ரெளட்டாலா, நடிகை மீரா ஜாஸ்மின், நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான் உள்பட பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது பிரபல பின்னணி பாடகி சித்ரா அவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி அவரை கௌரவித்தது. இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுவரை கோல்டன் விசா வழங்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது,.

 

Trending

Exit mobile version