தமிழ்நாடு

அது அவளுடைய கருப்பை.. அவளுடைய உரிமை: ‘சிசேரியன்’ குறித்து அமைச்சரின் கருத்துக்கு சின்மயி பதில்!

Published

on

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் நேற்று பேட்டி அளித்த போது இனிமேல் விரும்பிய நேரத்தில் சிசேரியன் முறையில் பிரசவம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பெரும்பாலும் சுகப்பிரசவம் முறையே ஊக்குவிக்கப்படும் என்று தெரிவித்தார். அவருடைய இந்த கருத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்புகள் சமூக வலைத்தளங்களில் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமைச்சரின் இந்த கருத்துக்கு பாடகி சின்மயி தனது கருத்தை தெரிவித்துள்ளார். சிசேரியன் முறை பிரசவம் என்பதே தடுக்க நடவடிக்கை எடுப்பது என்பது நடைமுறையில் முடியாது என்றும் அதை முடிவு செய்வது பெண்கள்தான் என்றும் கூறினார். ஜாதகம், நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து குழந்தை பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டும் பெண்கள் சிசேரியனை முடிவை எடுப்பது இல்லை என்றும், ஒரு சில பெண்களால் பிரசவ வலியை பொறுத்துக் கொள்ள முடியாது என்பதால் கூட அவர்கள் சிசேரியன் முடிவை எடுக்கலாம் என்றும் தெரிவித்தார்.

மேலும் உடலில் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் சிசேரியன் முடிவை எடுக்கலாம் என்றும், எனவே ஒட்டு மொத்தமாக சிசேரியனை கட்டுப்படுத்த முயல்வது சரியானதல்ல என்றும், வலியை விரும்பாத பெண்கள் சிசேரியனுக்கு போக முடிவு எடுத்தால் அதனை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்று எங்கள் அம்மா, பாட்டி எல்லாம் வலியை பொறுத்துக் கொள்ள வில்லையா என்பதெல்லாம் தேவையற்ற கருத்துக்கள் என்றும், இந்தக் கருத்தைச் சொல்வது பெண்களாகவே இருந்தாலும், அந்த கருத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு சிசேரியன் குறித்து முடிவு எடுக்க முழு உரிமை என்றும், ஏனென்றால் அது அவளுடைய கருப்பை அவருடைய உரிமை என்று தெரிவித்துள்ளார். பாடகி சின்மயி இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version