உலகம்

தடுப்பூசி போட்டவர்களை குறி வைத்து தாக்குகிறதா கொரோனா வைரஸ்?

Published

on

சிங்கப்பூரில் இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போட்டவர்களை கொரோனா வைரஸ் குறிவைத்து தாக்கினாலும் மிகவும் லேசான பாதிப்பு மட்டுமே அவர்களுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளில் உள்ள மக்களும் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிங்கப்பூர் அரசு தனது நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை தீவிரப்படுத்தி வருகிறது.

57 லட்சம் மக்கள் தொகை மக்கள் தொகை கொண்ட சிங்கப்பூரில் இதுவரை 75 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டதாகவும், அவர்களில் 50 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டதாகவும் செய்திகள் வெளியாகிறது. இருப்பினும் சிங்கப்பூரில் கடந்த ஒரு மாதத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 30% ஒரு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் என்றும் 25% தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த தகவலை சிங்கப்பூர் அரசு உறுதி செய்துள்ள நிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மிகவும் லேசான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் ஒரு சில நாட்களில் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் இதுவே தடுப்பூசி எந்த அளவுக்கு கொரோனாவை கட்டுப்படுத்துகிறது என்பதற்கு சிறந்த உதாரணம் என்றும் சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எனவே அனைவரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என்றும் இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த தகவலை உலக மக்களுக்கு தெரிவிப்பதாகவும் சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version