சினிமா செய்திகள்

புளூசட்டை மாறனின் ‘ஆன்டி இந்தியன்’ படத்திற்கு திடீர் தடை!

Published

on

யூடியூபில் சினிமா விமர்சனம் செய்யும் ப்ளூ சட்டை மாறன் ‘ஆன்டி இந்தியன்’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தமிழகத்தில் பல திரையரங்குகளில் ‘ஆன்டி இந்தியன்’திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பதாகவும், அதேபோல் அண்டை மாநிலங்களிலும் உலகின் பல நாடுகளிலும் ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த படம் பத்திரிகையாளர்களுக்கு போட்டுக் காண்பித்த போது பத்திரிகையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது என்பதும் அதேபோல் இயக்குனர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் சிறப்பு காட்சி போடப்பட்ட நிலையில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் திடீரென சிங்கப்பூரில் ‘ஆன்டி இந்தியன்’ திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மத சம்பந்தமான சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகவும் சில சர்ச்சைக்குரிய வசனங்கள் இருப்பதாகவும் சிங்கப்பூரில் இந்த படத்தை தடை செய்வதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ‘ஆன்டி இந்தியன்’ படக்குழுவினர் சிங்கப்பூரில் ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் ‘ஆன்டி இந்தியன்’ திரைப்படம் இன்று வெளியாகும் நிலையில் சிங்கப்பூரில் மட்டும் தடை செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version