சினிமா செய்திகள்

சிந்துபாத் சிங்கிள் டிராக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published

on

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் சிந்துபாத் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் மே 29ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சிந்துபாத் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியக நடிகை அஞ்சலி நடித்துள்ளார். இருவரும் ஏற்கனவே இறைவி படத்தில் சேர்ந்து நடித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் இந்த ஜோடி இணைந்துள்ளது.

சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் திரைப்படத்திற்கு போட்டியாக கடந்த மே 16ம் தேதி சிந்துபாத் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

இந்நிலையில், தற்போது படத்தின் சிங்கிள் டிராக் வெளியீட்டு தேதியை விஜய்சேதுபதி அறிவித்துள்ளார். இதனால், விரைவில் சிந்துபாத் படம் வெளியாகும் என தெரிகிறது.

seithichurul

Trending

Exit mobile version