வீடியோ

சூப்பர் டீலக்ஸ் ஃபார்முலா சிந்துபாத் டீஸருக்கு ஒர்க்கவுட் ஆகுமா?

Published

on

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி என விஜய்சேதுபதியை வைத்து இரண்டு படங்களை இயக்கிய இயக்குநர் அருண்குமார், மூன்றாவது முறையாகவும் விஜய்சேதுபதியை வைத்து இயக்கியுள்ள படம் தான் சிந்துபாத்.

விஜய்சேதுபதிக்கு இறைவி படத்திற்கு பிறகு சிந்துபாத் படத்தில் ஜோடியாக நடித்துள்ளார் நடிகை அஞ்சலி. உடல் எடையை குறைத்தவிட்ட அஞ்சலிக்கு, தற்போது தமிழ் சினிமாவில் அரை டஜன் படங்களுக்கும் மேல் வரிசைக்கட்டி நிற்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் வெளியாகவுள்ள விஜய்சேதுபதியின் சிந்துபாத் படத்தின் டீஸர் நேற்று மாலை வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.

ஆனால், டீஸரில் விஜய்சேதுபதி பேசும் வசனம், அண்மையில் அவர் நடிப்பில் உருவாகி வெளியான சூப்பர்டீலக்ஸ் படத்தின் டிரெய்லரில் விஜய்சேதுபதி பேசும் வசனம் போலவே உள்ளது. சற்று சுவாரஸ்யத்தை குறைக்கும் விதமாகவே உள்ளது.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பின்னணி இசை படத்திற்கான பலத்தை கூட்டுகிறது.

seithichurul

Trending

Exit mobile version