சினிமா செய்திகள்

இந்த வாரமாவது ரிலீசாகுமா சிந்துபாத்?

Published

on

சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கலுடன் ரிலீசாக வேண்டிய படம் சிந்துபாத். ஆனால், இதுவரை ரிலீஸ் ஆகவில்லை. கடந்த வாரம், ஜூன் 21ம் தேதி தனுஷின் பக்கிரி படத்துடன் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு, டிக்கெட்டுகளும் விற்பனை ஆகின.

ஆனால், கடைசி நேரத்தில் தயாரிப்பாளர் தரப்பில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக படம் வெளியாகவில்லை என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில், வரும் ஜூன் 28ம் தேதி சிந்துபாத் திரைப்படம் உறுதியாக வெளியாகும் என தற்போது தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி தனது மகனுடன் நடித்துள்ளார். மேலும், விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார்.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version