செய்திகள்

சிந்து மாகாணத்தைத் தனித்த தேசமாக அறிவிக்க மக்கள் போராட்டம்

Published

on

பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் பிரதமர் மோடி மற்றும் உலக தலைவர்களின் பதாகைகளுடன் சுதந்திர பேரணி நடைபெற்றது. சிந்து மாகாணத்தைத் தனித்த தேசமாக அறிவிக்க மக்கள் போராட்டம் நடத்தினர்.

முன்பு சிந்து சமவெளி நாகரீகத்தின், சிந்து மாகாணம் பிரிட்டிஷ்காரர்களால் கைப்பற்றப்பட்டது. இதனை 1947-ம் ஆண்டு பாகிஸ்தானிடம் பிரிட்டிஷ் காரர்கள் ஒப்படைத்தனர்.இந்த நிலையில் முதன்முதலாக, கடந்த 1967-ம் ஆண்டு சிந்து மாகாணத்தை தனி தேசமாக அறிவிக்கக் கோரி பாகிஸ்தானில் சிந்துமாகாணத் தலைவர் ஜிஎம் சையது, பீர் முகமது அலி ரஷ்டி ஆகியோரது தலைமையில் போராட்டம் தொடங்கியது. இந் நிலையில் நேற்று ஜிஎம் சையதுவின் 117-வது பிறந்த நாளையொட்டி பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் கோரி பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் போராட்டக்காரர்கள் பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் அடங்கிய படம் கொண்ட பதாகைகளுடன் கோஷங்கள் எழுப்பி பேரணி நடத்தினர். சிந்து மக்கள் அடக்குமுறைக்கு அடிபணிந்து பாகிஸ்தானின் அடிமைகளாக இருக்க விரும்பவில்லை. எனவே எங்கள் சுதந்திர வேட்கையைக் குறித்து உலக நாடுகளிடம் ஆதரவு கேட்டு வருகிறோம் என பேரணியில் உள்ளோர் கூறினர்.

Trending

Exit mobile version