சினிமா செய்திகள்

ஒரு நாள் முன்னதாக ரிலீஸ் ஆகும் சிந்துபாத்!

Published

on

விஜய்சேதுபதியின் சிந்துபாத் படம் ரிலீசாவதில் பல சிக்கல்கள் இருந்து வந்தன. இறுதியாக இந்த வாரம் வெள்ளிக்கிழமை படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வியாழக்கிழமையே படம் ரிலீசாகும் என புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி அகிய இரு படங்களை இயக்கிய அருண்குமார், மூன்றாவது முறையாக விஜய்சேதுபதியுடன் இணைந்துள்ள படம் தான் சிந்துபாத். இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். மேலும், விஜய்சேதுபதி மகனும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடந்த மாதமே படம் ரிலீசாக வேண்டிய நிலையில், இந்த மாதம் இறுதி வரை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போடப்பட்டன. கடைசியில் வரும் வெள்ளிக்கிழமை ஜூன் 28ம் தேதி படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. அதற்கும் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் தனது படம் ஹவுஸ் ஓனர் வருகிறது என்ற எதிர்ப்பை தெரிவித்தார்.

இந்நிலையில், நாளை ஜூன் 27ம் தேதியே படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version