சினிமா செய்திகள்

சிம்ரன்- தமன்னா… ’அந்தாதுன்’ தபு கதாபாத்திர ரீமேக்கில் கலக்கப்போவது யார்..?

Published

on

ஹிந்தியில் நடிகர் ஆயுஷ்மான் குரானா- தபு நடிப்பில் வெளியாகி அதிரடி வசூலைப் பெற்றத் திரைப்படம் அந்தாதுன். இத்திரைப்படத்தில் நடிகை தபு-வின் ஹிந்தி கதாபாத்திரமாக தமிழ் ரீமேக்கில் நடிக்க நடிகை சிம்ரன் ஒப்பந்தமாகி உள்ளார்.

ஆயுஷ்மான் கதாபாத்திரத்தில் நடிகர் பிரஷாந்த் நடிக்கிறார். ஹிந்தியில் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தை தமிழில் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்பட இயக்குநர் ஜே.ஜே.ஃபெட்ரிக் இயக்குகிறார். இதேபோல், தெலுங்கு மொழியில் ரீமேக் ஆகும் திரைப்படத்தில் தபு கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை தமன்னா ஒப்பந்தமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் ஜோடி திரைப்படம் மூலம் பிரபலமான ஜோடிகளாக ரசிகர்களைக் கவர்ந்த பிரஷாந்த்- சிம்ரன் இம்முறை எதிரெதிர் பாத்திரங்களில் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது.

Trending

Exit mobile version