சினிமா செய்திகள்

முதல்முறையாக விக்ரம் படத்தில் இணைந்த சிம்ரன்: எந்த படத்தில் தெரியுமா?

Published

on

விக்ரம் மற்றும் சிம்ரன் ஆகிய இருவரும் கடந்த பல ஆண்டுகளாக திரையுலகில் இருந்தாலும் இதுவரை ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்கவில்லை. விக்ரம் மற்றும் சூர்யா நடித்த ’பிதாமகன்’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் சிம்ரன் நடனமாடி இருப்பார். இருப்பினும் இருவரும் இணைந்து ஜோடியாக இதுவரை நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அந்த வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது.

விக்ரம் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் சிம்ரன் ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளார் என்பது ஏற்கனவே தெரிந்ததே, இந்த படத்தில்தான் சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த படத்தில் சந்தோஷ்நாராயணன் இசையமைக்க ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 7 ஸ்கிரீன் லலித்குமார் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கிறது என்றும் விரைவில் இந்த படம் குறித்த அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version