சினிமா செய்திகள்
விக்ரமோடு ஜோடி சேரும் சிம்ரன்; “சியான் 60” கலக்கல் அப்டேட்!
நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனும் நடிகருமான துருவ் ஆகியோர் இணைந்து அடுத்ததாக ஓர் திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தை ‘சியான் 60’ என அழைக்கின்றனர்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்தப் படத்திற்கு முன்னதாக அனிருத் இசையமைப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. பின்னர் எழுந்த சில சிக்கல்கள் காரணமாக அவர் விலகினார். அதைத் தொடர்ந்து தான் சந்தோஷ் நாராயணனைப் படக்குழு வளைத்துள்ளது.
Happy to announce that my next directorial after #JagameThandhiram is…. ‘CHIYAAN60’#Chiyaan60
Starring the awesome Chiyaan Vikram Sir & Dhruv Vikram…
And it will be an @anirudhofficial musical..
Produced by @Lalit_SevenScr @7screenstudio
So excited for this film…. pic.twitter.com/Oof0je5Eg4
— karthik subbaraj (@karthiksubbaraj) June 8, 2020
துருவுக்கு ‘ஆதித்ய வர்மா’ திரைப்படம் நினைத்த அளவுக்கு கை கொடுக்கவில்லை. விக்ரமுக்கும் கடந்த சில ஆண்டுகளாக, தான் நடித்த எந்தப் படமும் மெகா ஹிட் அந்தஸ்தைப் பெறவில்லை. இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ், இருவருக்குமான இந்தப் போக்கை மாற்றிக் காண்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் இயக்குநராக கார்த்திக் சுப்பராஜ் உருவெடுத்திருப்பது, ‘சியான் 60’ மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
@SimranbaggaOffc madam joins the Gang #Chiyaan60 ????
Welcome Madam & we are So happy to work with you again after #Petta ???? pic.twitter.com/lmOkhV94iu
— karthik subbaraj (@karthiksubbaraj) March 11, 2021
இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகை சிம்ரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் இந்தப் படத்திற்கான ஷூட்டிங் தொடங்கியது.