அழகு குறிப்பு

எளிய முறையில் உங்கள் முகத்தை அழகு படுத்தும் முறைகள்

Published

on

*பப்பாளிப் பழத்தை முகத்தில் பூவி வர முகம் பொலிவு பெறும். பப்பாளி துண்டுகள், கற்றாழை ஜெல் சிறிது பால், கால் ஸ்பூன் சர்க்கரை ஆகியவை கலந்த பேஸ்டை 10 நிமிடங்கள் முகத்தில் மசாஜ் செய்து கழுவவும்.

*ஓட்ஸை முதல் நாள் இரவிலேயே ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலனை விரைவில் காணலாம்.

*எலுமிச்சையைப் போலவே, உருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே உருளைக்கிழங்கை பேஸ்ட் செய்து, அதனை தினமும் முகத்தில் தடவி நன்கு ஊற வைத்து கழுவினால், முகம் பொலிவோடு மின்னும்.

*சிறிதளவு பால், கால் ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் கடலை மாவு, சிறிது கஸ்தூரி மஞ்சள் சேர்த்து பேஸ்டாக கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

*பாலில் பேரீச்சம் பழத்தைக் கலந்து பருகிவர, நகங்கள் பலமடையும். பாதாம் எண்ணெய்யை நகத்தில் தடவி வர பலபலப்பாகும்.

* குங்குமப்பூவை பாலுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ, குங்குமப்பூவில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் மேம்பட்டு காணப்படும். அதிலும் இந்த செயலை தினமும் ஒருவர் பின்பற்றினால், சீக்கிரம் வெள்ளையாவதைக் காணலாம்.

*பயற்றம்பருப்பு மாவு, தர்பூசணி பழச்சாற்றைக் கலந்து முகத்தில் பூசி வர முகம் பொலிவு பெரும். பீட்ரூட் உதட்டில் தேய்ப்பது இதழ்களுக்கு அழகு.

 

 

 

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version