ஆட்டோமொபைல்

தமிழ்நாட்டிற்குக் கிடைத்த மற்றொரு மகுடம்.. சிம்பிள் எனர்ஜி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை தொடக்கம்!

Published

on

கிருஷ்ணகிரி: தமிழ்நாட்டிற்குக் கிடைத்த மற்றொரு மகுடமாக சிம்பிள் எனர்ஜி நிறுவனம் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலையை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரியில் தொடங்கியுள்ளது.

100 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் இந்த தொழிற்சாலை 2,00,000 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் காப்புரிமை பெற்ற உள் எலக்ட்ரிக் மோட்டார் உற்பத்தி, பேட்டரி உற்பத்தி, செல் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த தொழிற்சாலையில் உள்ளன.

இங்கு பணிபுரியப் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 700 நபர்களுக்கு இங்கு நேரடியாகப் பணி வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் ஏத்தர், ஓலா உள்ள எலக்ட்ரிக் வாகன நிறுவனங்கள் மிகப் பெரிய அளவில் தங்களது தொழிற்சாலையை அமைத்துள்ள நிலையில், சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் இந்த தொழிற்சாலையும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இந்த தொழிசாலைக்கு வெர்ஷன் 1.0 என பெயரிடப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுக்கு 10 லட்சம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்யப்படும்.

seithichurul

Trending

Exit mobile version