சினிமா செய்திகள்

சிம்பிளாக நடந்த சிம்பு தம்பியின் திருமணம்!

Published

on

டி.ராஜேந்தரின் இளைய மகனும் நடிகர் சிம்புவின் தம்பியுமான குறளரசனின் திருமணம், நேற்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது.

இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்த குறளரசன், கடந்த பிப்ரவரி 16ம் தேதி தந்தை டி.ராஜேந்தர் முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார்.

குறளரசன் -நபீலா அஹமத் ஆகியோரது திருமணம் சென்னை, அண்ணா நகரில் உள்ள மணமகள் வீட்டில் இஸ்லாமிய முறைப்படி நேற்று நடைபெற்றது. உடல் எடையைக் குறைப்பதற்காக லண்டனுக்குச் சென்ற நடிகர் சிம்பு, தன் தம்பியின் திருமணத்தை முன்னிட்டு சென்னை திரும்பினார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

மிகவும் எளிய முறையில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் மணமக்கள் வீட்டார் மட்டுமே இருந்தனர். குறளரசன் நபீலாவின் திருமண வரவேற்பு திரையுலகினர் சூழ வரும் 29-ம் தேதி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற இருக்கிறது.

seithichurul

Trending

Exit mobile version