சினிமா செய்திகள்

முஸ்லீம் மதத்துக்கு மாறி கும்பு ஆனார் சிம்புவின் தம்பி!

Published

on

சிம்புவின் தம்பி குறளரசன், முஸ்லீம் மதத்திற்கு முறைப்படி மாறியுள்ளார். குறளரசன் எனும் தனது பெயரையும் முகமது கும்பு என மாற்றிக் கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில், இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர் என பல திறமைகளை கொண்டு 80களில் பல ஹிட்களை கொடுத்த டி.ராஜேந்திரனின் இளைய மகனும், நடிகர் சிம்புவிம் தம்பியுமான குறளரசன் முஸ்லீம் மதத்திற்கு மாறியுள்ளார். தனது வீட்டிலேயே, தனது தந்தை டி.ராஜேந்திரன் மற்றும் தாயார் முன்னிலையில், குறளரசன் முஸ்லீம் மதத்திற்கு மாறும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சிம்பு – நயன்தாரா நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு படத்தில் இசையமைப்பாளராக குறளரசனை சிம்பு அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், தற்போது குறளரசன் முகமது கும்புவாக மாறியுள்ளார்.

முன்னதாக டி.ராஜேந்திரரின் மகள் இலக்கியா கிறிஸ்துவ மதத்துக்கு மாறியது குறிப்பிடத்தக்கது.

எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையுடன் தான் வாழ்வதாகவும், தனது மூன்று பிள்ளைகளும் மூன்று மார்க்கங்களை பின் தொடர்வது அவர்களின் சுதந்திரம் என இதற்கு டி.ஆர் விளக்கம் அளித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version