சினிமா செய்திகள்
பிரபல நடிகருக்காக சிம்பு பாடிய பாடல் இன்று ரிலீஸ்: குவியும் வாழ்த்துக்கள்!
![str simbu - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/str-simbu.jpg)
பிரபல நடிகருக்காக சிம்பு பாடிய பாடல் ஒன்று இன்று ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து சிம்புவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் கார்த்தி. இவர் நடித்து முடித்துள்ள ’சுல்தான்’ என்ற திரைப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இரவு 7 மணிக்கு இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாரையும் இவ்வளவு அழகா’ என்று தொடங்கும் இந்த பாடலை சிம்பு பாடி உள்ளதாகவும் இந்த பாடலை விவேகா என்பவர் எழுதி இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இசை இரட்டையர்கள் விவேக்-மெர்வின் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் சிம்புவின் குரலில் மிகப் பெரிய ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ என்ற திரைப்படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நெப்போலியன், லால், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
???? #Sulthan2ndSingle – யாரையும் இவ்ளோ அழகா releasing today at 7 PM.
???? #SilambarasanTR
✍️ @Viveka_Lyrics
???? @MervinJSolomon @iamviveksiva @Karthi_Offl @iamRashmika@Bakkiyaraj_k #சுல்தான்#Sulthan2ndSingleFromToday#Sulthan2ndSingleFromToday7pm pic.twitter.com/osAZkmpzFy— Diamond Babu (@idiamondbabu) March 5, 2021