சினிமா செய்திகள்
எதிர்பார்க்கலல.. இனிமே நான் தான்: சிம்புவின் பிக்பாஸ் புரமோ!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் திடீரென இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் விலகிக் கொள்வதாக அறிவித்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு பதில் சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் ஹாட்ஸ்டாரில் சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது குறித்த புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
எதிர்பார்க்கலல.. நானே எதிர்பார்க்கவில்லை, பார்க்கலாமா என்று சிம்பு ஸ்டைலாக கூறும் காட்சிகள் உள்ளன. இதனையடுத்து சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை விஜய் டிவி உறுதி செய்துள்ளது.
வரும் சனி ஞாயிறு முதல் இந்த நிகழ்ச்சி முடியும் வரை சிம்புதான் பிக்பாஸ் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார் என்ற நிலையில் கமல்ஹாசன் அளவுக்கு இல்லை என்றாலும் விறுவிறுப்பாக தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் கமல்ஹாசனுக்கு கொடுத்த மரியாதையை பிக்பாஸ் போட்டியாளர்கள் சிம்புவுக்கும் கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
#STRtheHostOfBBUltimate ???? pic.twitter.com/GWozob5Kwu
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) February 24, 2022