சினிமா

இனிமே பெரிய பட்ஜெட் படங்கள் தான்; திடீரென அடம்பிடிக்கும் சிம்பு!

Published

on

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள பத்து தல திரைப்படம் வரும் மார்ச் 30ம் தேதி திரைக்கு வருகிறது. அடுத்ததாக நடிகர் சிம்பு இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தேசிங் பெரியசாமி சொன்ன கதையில் தான் சிம்பு நடிக்கப் போகிறார் என்றும் அந்த படத்தின் பிளாஷ்பேக் போர்ஷனின் செலவையே சிம்பு தலையிட்டு பெரியளவில் குறைத்து விட்டார் என்றும் அதனால் தயாரிப்பாளர் கமல் சந்தோஷமடைந்துள்ளார் என்றும் கூறுகின்றனர்.

#image_title

இந்நிலையில், கமல்ஹாசனை மேலும் ஹேப்பி ஆக்கும் வகையில் நடிகர் சிம்பு தனது சம்பளத்தை 30 கோடியில் இருந்து 25 கோடி ரூபாயாக குறைத்துள்ளார் என லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கு காரணம் படத்தின் பட்ஜெட் 100 கோடி என்பதால் தானாம். படத்தின் பட்ஜெட்டே 100 கோடியாக இருக்கும் பட்சத்தில் எளிதாக வசூல் 200 கோடியை நெருங்கும் என்பதால் தனது மார்க்கெட் உச்சத்துக்கு சென்று விடும் என்கிற பக்கா பிளானில் தான் நடிகர் சிம்பு இப்படியொரு சம்பள குறைப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறுகின்றனர்.

#image_title

மேலும், இனிமேல் 100 கோடி பட்ஜெட்டுக்கும் அதிகமான படங்களிலேயே தொடர்ந்து நடிக்கப் போவதாகவும் பெரிய பட்ஜெட்டில் தன்னை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு எந்தவொரு சம்பளச் சுமையும் கொடுக்காமல் தனது சம்பளத்தை கணிசமாக குறைத்துக் கொள்வேன் என வலையை விரித்து இருக்கிறார்.

சிம்புவின் அடுத்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்து 200 கோடி உயர்ந்து விட்டால் ஆட்டோமேடிக்காக அவரது சம்பளமும் சேர்ந்தே ஏறிவிடும் என்கிற மாஸ்டர் பிளானை போட்டு பக்காவாக கேம் ஆடி வருகிறார் சிம்பு என்று சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

seithichurul

Trending

Exit mobile version